விவசாய நிலத்தில் தாழ்வாக மின்கம்பி
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே விவசாய நிலத்தில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.சிங்கம்புணரியில் இருந்து வேங்கைப்பட்டி செல்லும் ரோட்டில் எம்.கோவில்பட்டி அருகே புதுவயல் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு மேல் மின் கம்பி தாழ்வாக கைக்கு எட்டும் துாரத்தில் செல்கிறது. அவ்வழியாக டிராக்டர் உள்ளிட்ட விவசாய உழவு வாகனங்கள் செல்லும் போது ஆபத்தான சூழல் நிலவுகிறது.விவசாயப்பணி காலங்களில் அச்சத்துடன் விவசாயிகள் உழவுப் பணிகளை மேற்கொள்கின்றனர். எதிர்பாராத விதமாக உழவு இயந்திரங்கள், வாகனங்கள் மின்கம்பிகளில் உரசி விபத்து ஏற்படுவதற்கு முன்பாக மின்வாரியம் வயலில் தாழ்வாக செல்லும் அனைத்து மின்கம்பிகளையும் கூடுதல் மின்கம்பங்கள் ஊன்றி, உயர்த்திட விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.