உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மடப்புரத்தில் வணிக வளாகம் இன்று திறப்பு

மடப்புரத்தில் வணிக வளாகம் இன்று திறப்பு

திருப்புவனம் : மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயில் வளாகத்தில் பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்ட கட்டடங்கள் இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் திறக்கப்படாதது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை அடுத்து இன்று (நவ.௧௩) முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார்.மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பக்தர்கள் தங்கி வழிபட விடுதி அமைப்பதற்காக 2022 ஜூன் 10ம் தேதி கோயில் எதிரே 4 ஆயிரத்து 200 சதுர அடி பரப்பளவில் இரண்டு கோடியே 28 லட்ச ரூபாய் செலவில் பக்தர்கள் தங்கும் விடுதி, வாகன நிறுத்துமிடம், வணிக வளாகம் உள்ளிட்டவை கட்ட நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கின. பணிகள் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே பணிகள் நிறைவடைந்து மின் இணைப்பும் வழங்கப்பட்டு ஓராண்டாகியும் திறக்கப்பட இல்லை.இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து இன்று 13ம் தேதி முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் கட்டடத்தை திறந்து வைக்க உள்ளார். மடப்புரத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் குத்துவிளக்கேற்றி வைக்க உள்ளார். விழாவில் ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, கோயில் உதவி ஆணையர் கணபதி முருகன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை