உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / 1080 கிலோ ரேஷன் அரிசி காரில் கடத்தியவர் கைது

1080 கிலோ ரேஷன் அரிசி காரில் கடத்தியவர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் மாவட்ட குடிமை பொருள் கடத்தல் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சி போஸ் மகன் செல்வராஜ் 31, ஓட்டி வந்த காரை சோதனை செய்தனர். அதில் 30 மூடைகளில் 1080 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வருவதை கண்டறிந்தனர். வெள்ளிக்குறிச்சி, திருப்பாச்சேத்தியில் ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்து விற்பனைக்காக கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். காருடன், ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்த போலீசார் செல்வராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை