உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  டிசம்பரில் விற்பனைக்கு வந்த மாம்பழம்

 டிசம்பரில் விற்பனைக்கு வந்த மாம்பழம்

திருப்புவனம்: மாம்பழ சீசன் முடிவடைந்த நிலையில் நேற்று திருப்புவனத்தில் மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டன. தமிழகத்தில் கோடை காலமான ஏப்ரல் முதல் மாம்பழங்கள் விற்பனைக்கு வரும். வடகிழக்கு பருவமழை நவம்பரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். ஜனவரி முதல் பூக்க தொடங்கி ஏப்ரல் தொடங்கி ஜூலை வரை மாம்பழங்கள் விற்பனை செய்யப்படும், ஒருசில இடங்களில் டிசம்பரிலும் மாம்பழங்கள் விற்பனைக்கு வரும். திருப்புவனத்தில் நத்தத்தைச் சேர்ந்த வியாபாரி குட்டி என்பவர் மாம்பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தார். வியாபாரி குட்டி கூறுகையில்: கோடை விளைச்சலில் கடைசி மாம்பழங்கள் இவை. பறித்து பழுக்க வைத்து விற்பனை செய்கிறோம், கிலோ 80 முதல் 100 ரூபாய் வரை ரகத்திற்கு ஏற்றவாறு விலை இருக்கும், கோடை கால மாம்பழம் போல ருசியாகவே இருக்கும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை