மட்டாகுளம் -- சக்கந்தி ரோடு சேதம்
சிவகங்கை: சிவகங்கை அருகே மட்டாகுளம் முதல் சக்கந்தி செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது. மட்டாகுளத்தில் இருந்து சக்கந்தி அரசு மேல்நிலை பள்ளிக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். இந்த ரோடு போடப்பட்டு பல ஆண்டுகளானதால், இன்றைக்கு ரோடு குண்டும் குழியுமாக பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் ரோட்டில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் ரோட்டை புதுப்பிக்க வேண்டும்.