| ADDED : டிச 30, 2025 05:38 AM
சிவகங்கை: காளையார்கோவில் அருகே பெரியநரிக் கோட்டையில் நலம் காக்கும் சிறப்பு மருத்துவ முகாம் இன்று (டிச.,30) நடைபெறும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது: பெரியநரிக்கோட்டை ஓ.எம்.ஜி.எஸ்., மெட்ரிக் பள்ளியில் காலை 9:00 முதல் மதியம் 3:00 மணி வரை இம்முகாம் நடைபெறும். இதில் பங்கேற்போருக்கு ரத்த பரி சோதனை, இ.சி.ஜி., உட்பட பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்படும். பொது மருத்துவம் மட்டுமின்றி 17 விதமான சிறப்பு மருத்துவ பரிசோதனை செய்யப்படும். டாக்டர்கள் பரிந்துரை செய்யும் நோயாளிகளுக்கு எக்கோ, எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், மகளிருக்கு கர்ப்ப பை வாய், மார்பக புற்றுநோய் பரிசோதனை நடத்தப்படும். இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.