மாணவன் குடும்பத்திற்கு அமைச்சர் நிதி உதவி
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் இறந்த தனியார் பள்ளி மாணவன் அஸ்விந்த் குடும்பத்துக்கு அமைச்சர் பெரியகருப்பன் நிதி வழங்கினார். வேங்கைபட்டியைச் சேர்ந்த பாலமுருகன் அழகுமீனாள் தம்பதி மகன் அஸ்விந்த் 7, தான் படித்த ஜெஸ்ரில் தனியார் பள்ளி வளாகத்தில் ஜூன் 30 ல் மர்மமான முறையில் இறந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அமைச்சர் பெரியகருப்பன் நேற்று மாணவனின் வீட்டிற்கு சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அப்போது தனது சொந்த நிதி ரூ. 5 லட்சத்தை அவர்களிடம் வழங்கினார். தி.மு.க., வினர் உடன் இருந்தனர். தொடர்ந்து பா.ஜ., நாம் தமிழர் கட்சியினரும் மாணவனின் பெற்றோருக்கு நேற்று ஆறுதல் கூறினர்.