உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் சாலையோர பார்க்கிங் நெரிசலில் தவிக்கும் வாகன ஓட்டிகள்

திருப்புவனத்தில் சாலையோர பார்க்கிங் நெரிசலில் தவிக்கும் வாகன ஓட்டிகள்

திருப்புவனம்: திருப்புவனத்தில் சாலையோரம் நிறுத்தப்படும் டூவீலர்கள், கார்களால் தினசரி போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.திருப்புவனத்தைச் சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க டூவீலர், ஆட்டோ, சரக்கு வாகனங்களில் திருப்புவனம் வந்து செல்கின்றனர். கிராமமக்கள் வரும் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் எதிரெதிரே வாகனங்கள் வரும் போது விலக கூட இடம் இன்றி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.ஏற்கனவே ஆக்கிரமிப்பு காரணமாக சாலைகள் குறுகி விட்ட நிலையில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் மேலும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. திருப்புவனம் பிரதான சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை விட நரிக்குடி ரோடு, உச்சிமாகாளியம்மன் கோயில் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நெரிசல் வாகனங்கள் சிக்கி நீண்ட நேரம் காத்து கிடக்க வேண்டியுள்ளது.நரிக்குடி ரோடு பகுதியில் சாலையோரம் எந்த வாகனங்களையும் நிறுத்த கூடாது என போலீசார் எச்சரித்தும் யாரும் அதனை கண்டு கொள்வதில்லை. இதனால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வாகனங்களும் செல்ல முடிவதில்லை. சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதுடன் எதிர் எதிரே வரும் வாகனங்களுக்கு விலக நேரிடும் போது இடித்து விட்டால் வாகன ஓட்டிகளை கூட்டமாக சேர்ந்து கொண்டு தாக்குகின்றனர். எனவே போக்குவரத்து போலீசார் நரிக்குடி ரோடு, உச்சி மாகாளியம்மன் கோயில் ரோடு பகுதியில் சாலையோரம் வாகனங்களை பார்க்கிங் செய்ய நிரந்தர தடை விதிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !