உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கள்ளத்தொடர்பில் பிறந்த குழந்தை கொலை : தாய், உறவினருக்கு ஆயுள் 

கள்ளத்தொடர்பில் பிறந்த குழந்தை கொலை : தாய், உறவினருக்கு ஆயுள் 

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் சேதாம்பால் கிராமத்தில் திருமண உறவை மீறி பிறந்த பெண் குழந்தையை கொலை செய்த தாய், உறவினருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்புஅளித்தது.சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேயுள்ள சேதாம்பால் கிராமத்தைச் சேர்ந்த முருகவேல் மனைவி கண்ணாத்தாள் 49. 14 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். கண்ணாத்தாளின் உறவினரான இளையான்குடி செந்தமிழ் நகர் சேர்ந்த மாணிக்க மகன் கார்த்திகை ராஜாவுடன் 59 பழக்கம் ஏற்பட்டது. இதில் 2013ல் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு கண்ணாத்தாளுடன் பழகுவதை கார்த்திக்ராஜா குறைத்துக் கொண்டார். இதுகுறித்து கேட்டபோது எனக்கு பெண் குழந்தை பிடிக்காது, அந்த குழந்தை அங்கு இருந்தால் நான் வரமாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணாத்தாள் 2014 அக். 3 இரவு 10:00 மணிக்கு குழந்தையை சானாரேந்தல் அருகே உள்ள காவிரி கூட்டு குடிநீர் தொட்டியில் போட்டு கொலை செய்தார்.இளையான்குடி போலீசார் கண்ணாத்தாளையும் கார்த்திகை ராஜாவையும் கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. கண்ணாத்தாளுக்கும் கார்த்திகை ராஜாவுக்கும் ஆயுள் தண்டனையும் ரூபாய் இரண்டாயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும்விதித்து நீதிபதி கோகுல் முருகன் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி