அருங்காட்சியகம் விடுமுறை
சிவகங்கை: திருப்புவனம் அருகே கீழடி அருங்காட்சியகம் செப்., 11 அன்று மூடப்படும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவு தினம் செப்., 11ல் நடக்கிறது. இதையடுத்து, அன்றைய தினம் கீழடி தொல்லியல் அருங் காட்சியகம் திறக்கப்படமாட்டாது, என்றார்.