உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  தேசிய நெடுஞ்சாலையால் கண்மாய் கொள்ளளவு பாதிப்பு

 தேசிய நெடுஞ்சாலையால் கண்மாய் கொள்ளளவு பாதிப்பு

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே தேசிய நெடுஞ்சாலையால் பிளவுபட்ட கண்மாய்களில் கொள்ளளவு பாதிக்கப்பட்டுள்ளது. திருப்புத்துார் ஒன்றிய கிராமங்கள் வழியாக மேலுார்--காரைக்குடி நான்குவழிச்சாலை செல்கிறது. அதில் பல கண்மாய்களின் நடுவே சாலை செல்கிறது. குறிப்பாக பிள்ளையார்பட்டியில் மட்டும் வடக்கி கண்மாய், புதுக்கண்மாய், ஒல்லிக் கண்மாய் ஆகிய மூன்று கண்மாய்களை இரு பகுதிகளாக பிரிக்கி றது. தற்போது அப் பகுதியில் நான்கு வழிச்சாலைகளுடன் சர்வீஸ் ரோடுகளுக்கான இடமும் சேர்ந்து கண்மாயின் உள் நீர்ப் பிடிப்பு பகுதியின் பெருமளவில் ரோடு போடப்பட்டுள்ளது. இதனால் இக்கண்மாய்களின் கொள்ளளவு பாதிக்கப்பட்டுள்ளது. தென்மாப்பட்டு கண்மாயில் ஒரே பகுதியில் ஆழமாக மண் எடுக்கப்பட்டுள்ளதால் வெட்டுப்பள்ளத்தில் நீர் தேங்கி மடைக்கு செல்ல முடியாமல் உள்ளது. இது போல பல கண்மாய்களில் ரோடு போடப்படுவதாலும், மண் அள்ளப்பட்டு சரியாக துார்வாரப்படாததாலும் கண்மாய் கொள்ளளவு பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது 90 சதவீத ரோடு பணிகள் முடி வடைந்துள்ளன. ஆனால் கண்மாய் கொள்ளளவை சரி செய்ய மாற்று ஏற் பாடுகள் இதுவரை செய்யப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ