மேலும் செய்திகள்
கெங்கையம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா விமரிசை
14-Sep-2024
சிவகங்கை : இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில் நாளை முதல் அக்., 15 வரை நவராத்திரி திருவிழா நடைபெற உள்ளது.இங்கு, நாளை (அக்.,3) மாலை 6:30 மணிக்கு அனுக்கை, துர்கா ேஹாமம், காப்பு கட்டுதலுடன் நவராத்திரி விழா துவங்குகிறது. அன்று இரவு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருள்கிறார்.அன்று மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறும். நவராத்திரியை முன்னிட்டு தினமும் மாலை 5:30 மணிக்கு அம்மன் அன்னை மீனாட்சி, ராஜாங்க சேவை, உக்கிரபாண்டியன் பிறப்பு, மகாலட்சுமி, காமாட்சி, அன்னபூரணி, மகிஷாசுரமர்த்தினி, சரஸ்வதி, சிம்ம வாகன ரூபிணி, ஊஞ்சல் சயன கோலத்தில் எழுந்தருளுகிறார்.அக்., 12 ல் விஜயதசமியை முன்னிட்டு மகர்நோன்பு அலங்காரத்தில் எழுந்தருள்வார். அன்று இரவு 7:30 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெறும்.அக். 15 அன்று இரவு 7:00 மணிக்கு பூப்பல்லக்கில் அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். விழாவை முன்னிட்டு வீணை கச்சேரி, இசை நிகழ்ச்சி, சொற்பொழிவு, அபிராமி அந்தாதி முற்றோதல், இசை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.கோயில் அறங்காவலர் குழு தலைவர் தட்சிணாமூர்த்தி, அறங்காவலர்கள் சண்முகம், சரவணன், ஆயிர வைசிய சபை தலைவர் சதாசிவம், செயலர் கோபி ஆகியோர் விழா ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.
14-Sep-2024