உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிங்கம்புணரியில் புதிய கலையரங்கம்

சிங்கம்புணரியில் புதிய கலையரங்கம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் சீரணி அரங்கம் இருந்த இடத்தில் புதிய கலையரங்கம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது.2 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்த அரங்கத்தை இடித்து விட்டு அங்கு பேரூராட்சி அலுவலகம் கட்ட பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திட்டம் கைவிடப்பட்டு பழைய இடத்திலேயே அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.சீரணி அரங்க கட்டடம் பழுதடைந்த நிலையில் அதை இடித்து விட்டு புதிதாக கலையரங்கம் கட்ட பொதுமக்கள் வலியுறுத்தினர்.இதைத் தொடர்ந்து நமக்கு நாமே திட்டத்தில் ரூ. 15 லட்சம் செலவில் புதிய கலையரங்கம் கட்ட முடிவு செய்யப்பட்டு இதற்கான பூமி பூஜை நேற்று போடப்பட்டது.நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து தலைமை வகித்தார். துணைத் தலைவர் செந்தில், செயல் அலுவலர் சண்முகம் முன்னிலை வகித்தனர். காங்., முன்னாள் எம்.எல்.ஏ., ராம. அருணகிரி, நமக்கு நாமே திட்டத்தில் 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கிய தொழிலதிபர் வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம், டாக்டர் அருள்மணி நாகராஜன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை