உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சுள்ளாம்பட்டியில் வட மஞ்சுவிரட்டு

சுள்ளாம்பட்டியில் வட மஞ்சுவிரட்டு

பூலாங்குறிச்சி: திருப்புத்தூர் ஒன்றியம் சுள்ளாம்பட்டியில் சின்னையா பட்டவன், தொட்டிச்சி கோயில் விழாவை முன்னிட்டு வட மஞ்சுவிரட்டு நடந்தது. இதில், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 17 காளைகள் பங்கேற்றன. மாடுகளை பிடிக்க அணிக்கு தலா 9 மாடு பிடிவீரர்கள் வீதம் 16 குழுக்கள் களம் இறங்கின. ஒரு அணிக்கு தலா 20 நிமிடம் மாடு பிடிக்க அனுமதி அளித்தனர். மாடு பிடிக்க முயன்றதில் 5 பேர் காயமுற்றனர். வெற்றிபெற்ற காளை, மாடு பிடி வீரர்களுக்கு பரிசு தொகை வழங்கினர். விழாக்குழுவினர் ஏற்பாட்டை செய்திருந்தனர். நாட்டரசன்கோட்டை: இங்கு நடந்த வடமஞ்சுவிரட்டில் மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டையை சேர்ந்த 17 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க 153 வீரர்கள் பங்கேற்னர். மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசு தொகை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ