தனியார் விதை விற்பனை நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் இப்ராம்சா,விதை ஆய்வாளர் அழகர் ராஜா ஆகியோர் தேவகோட்டை,கண்ணங்குடி வட்டாரங்களில் செயல்படும் அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு நடத்தினர். விதை கொள்முதல் ஆவணம், விற்பனை பட்டியல், பதிவு சான்று, இருப்பு பதிவேடு, விற்பனை ரசீதை ஆய்வு செய்தனர். முளைப்புத்திறனை உறுதி செய்த பின்னரே விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். தனியார் விதை விற்பனை நிலையங்களில் தமிழ்நாட்டிற்கு அங்கீகரிக்கப்படாத நெல் ரகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சரியான இருப்பு வைக்காமல் இருத்தல், செயல்படாமல் இருந்த 15 விற்பனை நிலையங்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.