மேலும் செய்திகள்
பள்ளியில் நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
29-Sep-2024
நெற்குப்பை: திருப்புத்துார் ஒன்றியம் கிளாமடத்தில் ஆ.தெக்கூர் எஸ்.வி.கே.மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டுநலப்பணி திட்ட முகாம் நடந்தது.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் துாய்மைப்பணி, நீர்த்தொட்டிகளை சுத்தம்செய்தல், கோயில் வளாகத்தில் துாய்மைப் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர். நிறைவு நாளில் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் கே.சீனிராஜன் தலைமை வகித்து நாட்டு நலப்பணித்திட்ட பணிகள் குறித்து விளக்கினார்.ஆ.தெக்கூர் ஊராட்சி தலைவர் திருப்பதி, நெற்குப்பை துணை தலைவர் கண்ணன், ஊ.ஒ.தொ.பள்ளி தலைமையாசிரியை அமுதவள்ளி, செயலர் டி.எஸ்.சேது, தலைமையாசிரியர் ப.சிவராஜன் வாழ்த்தினர். முகாமை என்.எஸ்.எஸ். முகாம் அலுவலர் எம்.சமயக்கருப்பன் ஒருங்கிணைத்தார்.
29-Sep-2024