உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விவசாயிகளை புறக்கணிக்கும் அதிகாரிகள்

விவசாயிகளை புறக்கணிக்கும் அதிகாரிகள்

திருப்புவனம்: திருப்புவனம் மற்றும்சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் சார்ந்த புகார்களை ஆய்வு செய்ய வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் யாரும் வராததால் விவசாயிகள் தீர்வு காண முடியாமல் தவித்து வருகின்றனர்.திருப்புவனத்தில் 45 ஊராட்சிகளைச் சேர்ந்த 173 கிராமங்கள் உள்ளன.இக்கிராமங்களில் நெல்,வாழை, கரும்பு, தென்னை, வெங்காயம், வெண்டை, கத்தரி, பாகற்காய் உள்ளிட்ட பல்வேறு விவசாயங்கள் நடந்து வருகின்றன. விவசாயிகளுக்கு விதை நெல் தொடங்கி உரம், வறட்சி, நோய் தாக்குதல்உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் வேளாண் துறைக்கு தான் முதலில் தகவல் கொடுப்பார்கள், வேளாண் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் நிலங்களுக்கு சென்று ஆய்வு செய்து அதற்கு ஏற்ப தீர்வு காண வேண்டும். ஆனால் கடந்த சில வருடங்களாக வேளாண், தோட்டக்கலை துறை அதிகாரிகள் யாரும் விவசாயிகளின் நிலங்களுக்கு நேரில் ஆய்வு செய்ய செல்வதில்லை. அதற்கு பதிலாக விவசாயிகளை அலைபேசியில் படம் எடுத்து அனுப்ப சொல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருப்புவனம் அருகே முக்குடி, பறையங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காய சாகுபடி அதிகளவு நடந்தது. சருகல் நோய், சுருள் நோய் தாக்குதலால் வெங்காய சாகுபடி சேதத்தை சந்தித்தது. இதற்கு தோட்டக்கலை துறை அதிகாரிகள் எந்த வித தீர்வும் காணாததால் விவசாய சாகுபடியே 80 சதவிகிதம் குறைந்து விட்டது. பன்றிகளால் நெல் பயிர்கள் சேதத்தை அதிகளவு சந்தித்து வருகிறது. கிணற்று பாசன விவசாயிகள் 250 ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளனர். குறைந்த பரப்பளவில்நெல் சாகுபடி நடந்துள்ளதால் பன்றிகள் இரவு நேரத்தில் கூட்டமாக வந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. விவசாயிகள் முறையிட்டால் நேரில் வந்து கூட பார்ப்பதில்லை. விவசாயி கண்ணன் கூறுகையில், ஐந்து வருடங்களாக வேளாண், தோட்டக் கலை துறை அதிகாரிகள் வயல் பக்கமே வருவதில்லை. நேரில் போய் புகார் கொடுத்தால்கண்டு கொள்வதே கிடையாது. கோடையில்ஆயிரம் ஏக்கரில் நடந்த சாகுபடி 250 ஏக்கராக குறைந்து விட்டதே அதற்கு தீர்வு காண வேண்டும் என எந்த அதிகாரியும் விசாரணை நடத்துவது கிடையாது, என்றார். திருப்புவனம் வேளாண் அலுவலகத்தில் 90 சதவிகிதம் பெண்களே பணிபுரிகின்றனர். தனியாக வயல்களுக்கு ஆய்விற்கு செல்ல தயக்கம் காட்டுகின்றனர். எனவே விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் சாகுபடி பரப்பளவும் குறைந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை