உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  ஒக்கூர் மாசாத்தியார் பேச்சுப் போட்டி

 ஒக்கூர் மாசாத்தியார் பேச்சுப் போட்டி

திருக்கோஷ்டியூர்: கண்டரமாணிக்கம் சேதுஐராணி பதின்ம மேல்நிலைப்பள்ளியில் சங்ககாலப் புலவர் ஒக்கூர் மாசாத்தியார் நினைவுப்பரிசு பேச்சுப்போட்டி நடந்தது. 27 பள்ளிகளைச் சேர்ந்த 65 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பல்வேறு தலைப்புக்களில் மாணவர்கள் பேசினர். முதல்பரிசாக ரூ 10 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ 7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம், நான்காம் பரிசாக ரூ.3 ஆயிரம்,ஐந்தாம் பரிசாக ரூ. 2 ஆயிரம் வீதம் நான்கு நிலைகளில் வென்ற 20 பேருக்கு பரிசு வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களை தாளாளர் சேதுகுமணன், பொருளாளர் திருநாவுக்கரசு மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ