| ADDED : டிச 30, 2025 05:45 AM
சிவகங்கை: அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தக்கோரி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் அனைத்து அரசு அலுவலர், ஆசிரியர், உள்ளாட்சி பணியாளர் கூட்டமைப்பு சார்பில் (போட்டா - ஜியோ) ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அன்பரசு பிரபாகரன் வரவேற்றார். தேசிய ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் பாண்டிமுருகன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில துணை பொது செயலாளர் ஆர்.அருள்ராஜ் கோரிக்கையை விளக்கி பேசினார். தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் பொன்னுச்சாமி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜெயப்பிரகாஷ், முன்னாள் மாவட்ட தலைவர் சுரேஷ் உட்பட கூட்டமைப்பின் நிர் வாகிகள் பங்கேற்றனர்.