உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கார் விபத்தில் ஒருவர் பலி

கார் விபத்தில் ஒருவர் பலி

சிவகங்கை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நகரிகாத்தான் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் மகாலிங்கம் 43. இவர் தற்போது சென்னை ஜவஹர் நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் நேற்று காரில் தனியாக சிவகங்கை தொண்டி ரோட்டில் அதிகாலை 5:00 மணிக்கு சென்றார். பையூர் அருகே செல்லும்போது ரோட்டின் ஓரத்தில் இருந்த மரத்தின் மீது கார் மோதியுள்ளது. இதில் மகாலிங்கம் பலியானார். இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !