உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திறந்தவெளி கிணறு: அதிகரிக்க நடவடிக்கை

திறந்தவெளி கிணறு: அதிகரிக்க நடவடிக்கை

திருப்புவனம்: திருப்புவனம் தாலுகாவில் திறந்த வெளி கிணறுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வைகை ஆறு பாயும் திருப்புவனம் தாலுகாவில்தென்னை, வாழை, கரும்பு, நெல், கத்தரி உள்ளிட்ட விவசாயம்அதிகளவில் நடைபெறுகின்றன. வைகை ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதானமாக செய்யப்படுகிறது. திருப்புவனம் வழியாக வைகை ஆறு செல்வதால் நிலத்தடி நீர் தட்டுப்பாடின்றி கிடைத்து வருகிறது. 80 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைத்து வரும் நிலையில் வறட்சி காலங்களை கணக்கிட்டு விவசாயிகள் பலரும் ஆழ்துளை கிணறுகளே அமைத்து வருகின்றனர். இதனால் தென்னை, மா உள்ளிட்ட விவசாயம் பாதித்து வருகிறது.ஆழ்துளை கிணறுகள் அனைத்தும் 200 அடி முதல் 400 அடி ஆழம் வரை அமைக்கப்படுகிறது. பாறைக்கு கீழே இருக்கும் தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றுவதால் பாறைகள் நகர வாய்ப்புண்டு, திறந்த வெளி கிணறு அமைக்கும்போது வயல்களில் பாய்ச்சப்படும் தண்ணீர் மரங்கள், செடிகள் உறிஞ்சியது போக மீத தண்ணீர்மீண்டும் ஊற்றுக் கண்ணிற்கே செல்லும்.எனவே நிலத்தடி நீரும் வற்றாது, திருப்புவனம் வட்டாரத்தில் 10 வருடங்களுக்கு முன் 69 திறந்த வெளி கிணறுகள், 81 ஆழ்துளை கிணறுகள் இருந்தன.இதில் ஆழ்துளை கிணறுகள் எண்ணிக்கை உயர்ந்துவிட்டன. ஆனால் திறந்தவெளி கிணறுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவே இல்லை, எனவே அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென விவசாயிகள்வலியுறுத்தியுள்ளனர். விவசாயிகள் தரப்பில் கூறுகையில், திறந்த வெளி கிணறு அமைக்க குறைந்த பட்சம் 10 லட்ச ரூபாய் வரை செலவாகும். இதற்கு அரசு மானியமும் உண்டு. ஆனால் அதற்கான விதிமுறைகள் அதிகம். எனவே விவசாயிகள் ஆழ்துளை கிணற்றை தான் விரும்புகிறோம். திறந்த வெளி கிணறுகளால் நிலத்தடி நீர் வற்றாது. மேலும் மழை காலங்களில் மழை நீரும் கிணற்றினுள் செல்லும். எனவே தண்ணீரில் சத்துகள் அதிகரிக்கும். கிணற்று தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்தும் போது விளைச்சலும் அதிகரிக்கும். மாவட்ட நிர்வாகம் விவசாயிகளிடையே திறந்த வெளி கிணறு அமைப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.கிணறு அமைக்க மானியம் உள்ளிட்ட சலுகையை அதிகரிக்க வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !