உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஊராட்சி கிளார்க் கைது

ஊராட்சி கிளார்க் கைது

சிவகங்கை,- மரக்காத்துாரை சேர்ந்தவர் காளீஸ்வரன் 80. அதே ஊரை சேர்ந்த இவரது அண்ணன் மகன் பூமிநாதன் 48. இவர் ஊராட்சி கிளார்க் ஆக பணிபுரிகிறார்.காளீஸ்வரனுக்கு காரைக்குடியில் 24 சென்ட் புஞ்சை நிலம் இருந்துஉள்ளது. இந்த இடத்தை விற்றுத்தர இடைத்தரகராகபூமிநாதன் செயல்பட்டுஉள்ளார். இடத்தை விற்றுவிட்டு இடம் விற்ற பணத்தில் ரூ.8 லட்சத்தை தருவதாக கூறி இரண்டு வருடமாக பூமிநாதன் ஏமாற்றியுள்ளார். காளீஸ்வரன் காளையார்கோவில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். போலீசார் மனு ரசீது வழங்கி விசாரணையில் இருந்துவரும் நிலையில் பூமிநாதன், காளீஸ்வரனையும், அவரது மகள் கற்பகவள்ளியையும் 44 தாக்கி கொலை மிரட்டல் விடுத்துஉள்ளார். காளையார்கோவில் போலீசார் பூமிநாதனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ