உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பள்ளத்தில் பயணியர் கூடம்

பள்ளத்தில் பயணியர் கூடம்

திருப்புத்துார் : திருப்புத்துார் ஒன்றியம் காரையூரில் பள்ளத்தில் உள்ள பயணியர் கூடத்தை அகற்றி புதிய பயணியர் நிழற்கூடம் அமைக்க கிராமத்தினர் கோரியுள்ளனர்.திருப்புத்துாரிலிருந்து சிங்கம்புணரி செல்லும் ரோட்டில் உள்ளது காரையூர் கிராமம். இங்கு பஸ் நிற்கும் இடத்தில் பயணியர் நிழற்கூடம் இருந்தது.தற்போது தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டதால் இந்த ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டு, உயர்த்தியும் புதுப்பிக்கப்பட்டது. இதனால் பழைய பயணியர் கூடம் பள்ளத்தில் சென்று விட்டது.முதியவர்கள் உள்ளிட்ட பயணியர் அதனுள் இறங்கி செல்ல முடியாமல் பயணியர் கூடத்தை பயன்படுத்துவதில்லை. இதனால் அதை அகற்றி விட்டு, புதிய பயணியர் கூடத்தை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க கிராமத்தினர் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !