உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இடியும் நிலையில் குடிநீர் தொட்டி அச்சத்தில் மக்கள்

இடியும் நிலையில் குடிநீர் தொட்டி அச்சத்தில் மக்கள்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே இடிந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இவ்வொன்றியத்தில் சிவபுரிபட்டி ஊராட்சி மணப்பட்டி கிராமத்தில் வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்க 1999ல் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.இது பழுதானதை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு முன்பு பழுது பார்க்கப்பட்டது. ஆனாலும் துாண்களில் வெடிப்பு மற்றும் சுவர்களில் பூச்சு பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது.இதனால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் அச்சத்தில் உள்ளனர். வேறு வழி இல்லாமல் இத்தொட்டி மூலமாகவே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆபத்தான நிலையில் இருப்பதால் உடனடியாக தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டி கட்டித்தர கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி