மயான ரோடு இல்லாததால் குமாரகுறிச்சி மக்கள் தவிப்பு
இளையான்குடி : இளையான்குடி அருகே உள்ள குமாரகுறிச்சி கிராமத்தில் மெயின் ரோட்டில் இருந்து மயானத்திற்கு செல்லும் ரோடு சேதமடைந்து தற்போது மக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு உள்ளது. ரோட்டின் ஓரங்களிலும்,மயான பகுதிகளிலும் கருவேல மரங்கள் வளர்ந்து அவதிக்குள்ளாவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.தற்போது மழைக்காலம் என்பதால் இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்லும் போது ஆங்காங்கே நடக்க முடியாத அளவிற்கு சேறும் சகதியுமாக இருப்பதாலும், குண்டும்,குழியுமாக உள்ள இடங்களில் மழை நீர் தேங்கி கிடப்பதாலும் இறந்தவர்களை கொண்டு செல்ல முடியாத நிலை இருப்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக குமாரகுறிச்சி மயானத்திற்கு செல்லும் ரோட்டை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.