மேலும் செய்திகள்
பங்குனி உத்திரம் தேர் திருவிழா நிறைவு
14-Apr-2025
மானாமதுரை : மானாமதுரையில் இந்தாண்டு சித்திரை திருவிழாவை ஒட்டி வைகை ஆற்றினுள் பொழுது போக்கு அம்சங்களான ராட்டினம் உள்ளிட்டவை அமைக்க போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். மானாமதுரையில் சித்திரை திருவிழா பத்து நாட்கள் நடைபெறும் .விழாவிற்கு மானாமதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்வார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்தார்கள் மண்டகப்படியில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளுவர்.அந்தந்த கிராமத்தார்கள் மண்டகப்படி நடைபெறும் போது கிராமமே வைகை ஆற்றுக்கு வந்து விடும், இரவு முழுவதும் கிராமத்தார்கள் சார்பில் கலைநிகழ்ச்சி நடைபெறும்.சிறுவர்,சிறுமியர்களை கவர வைகை ஆற்றினுள் ஒவ்வொரு வருடமும் டோரா டோரா, ஜெயண்ட் வீல், சர்க்கஸ், பொம்மை ரயில், ராட்சத பலூன், சிறுவர் போட், கார், பைக் சாகசம் என ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்படும்.இதற்காக நகராட்சி, காவல்துறை, தீயணைப்பு துறையினர் அனுமதி வழங்க வேண்டும்.இந்தாண்டு வைகை ஆற்றினுள் ராட்டினங்கள் அமைக்க போலீசார் நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி மறுத்து விட்டனர்.
14-Apr-2025