உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கல்வி கடன் ரூ.45 கோடி வழங்க இலக்கு முன்னோடி வங்கி மேலாளர் பேச்சு

கல்வி கடன் ரூ.45 கோடி வழங்க இலக்கு முன்னோடி வங்கி மேலாளர் பேச்சு

சிவகங்கை:சிவகங்கை மாவட் டத்தில் தேசிய வங்கிகள் மூலம் நடப்பாண்டில் 1500 மாணவர்களுக்கு ரூ.45 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர் ணயித்துள்ளோம் என முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார் பேசினார். சிவகங்கையில் கல்வி கடன் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். கலெக்டர் பி.ஏ.,(பொது) முத்துக்கழுவன் வரவேற்றார். தாட்கோ மாவட்ட மேலா ளர் செலினா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாணவர்கள் 6 பேருக்கு ரூ.24.15 லட்சம் கல்வி கடன் ஆணையை கலெக்டர் வழங்கினார். கல்வி கடன் ரூ.45 கோடி இலக்கு: முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார் பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் தேசிய வங்கிகள் மூலம் கடந்த ஆண்டு (2024--25) 2498 மாணவர்களுக்கு ரூ.24.95 கோடி வரை கல்வி கடன் வழங்கியுள்ளது. இந்த ஆண்டு (2025-26) 1500 மாணவர்களுக்கு ரூ.45 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். இது வரை (2025 ஜூன் வரை) 763 மாணவர்களுக்கு ரூ.18.98 கோடி வரை வழங்கப் பட்டுள்ளது. கல்வி கடன்களை முழுமையாக வழங்க மாவட்ட அளவில் கல்வி கடன் முகாம்கள் நடத்தப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ