உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  இளைஞர் மீது போக்சோ வழக்கு

 இளைஞர் மீது போக்சோ வழக்கு

சிவகங்கை: காளையார்கோவில் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி, சிறுவர்களுடன் வீட்டிற்கு அருகே உள்ள கண்மாயில் மீன்பிடிப்பதை பார்க்க சனிக்கிழமையன்று மதியம் 3:00 மணிக்கு சென்றனர். சிறிது நேரத்தில் அச்சிறுமியை அப்பகுதியை சேர்ந்த காளிமுத்து 25 என்பவர் துாக்கி சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து சிறுமியுடன் சென்ற சிறுவர்கள், அவரது அம்மாவிடம் தெரிவித்தனர். தனது அம்மாவிடம் சிறுமி நடந்ததை தெரிவித்துள்ளார். இளைஞர் காளிமுத்து மீது போக்சோ சட்டத்தின் கீழ் சிவகங்கை மகளிர் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி வழக்கு பதிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை