முன்னாள் கவுன்சிலர் மீது தாக்குதல் போலீஸ் விசாரணை
திருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தலில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மீது காரில் வந்த கும்பல் தாக்கியதில் பலத்த காயமடைந்தார். லாடனேந்தலைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுப்பையா, 50, தி.மு.க.,வைச் சேர்ந்த இவர் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு வீட்டு வாசலில் நின்றார். அங்கு காரில் வந்த கும்பல் மரக்கட்டையால் அவரது தலையில் தாக்கினர். திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.