உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போலீஸ் செய்தி:சிவகங்கை

போலீஸ் செய்தி:சிவகங்கை

துணி, அரிசிக்கடையில் திருட்டு ஒருவர் கைது

சிவகங்கை: காளையார்கோவிலில் துணிக்கடை, அரிசிக் கடையில் ரூ.80 ஆயிரம் திருடியவரை போலீசார் கைது செய்தனர். காளையார்கோவில் அருகே நெடோடை பாண்டி 48. இவர் புலியடிதம்பத்தில் துணிக்கடை நடத்துகிறார். பள்ளித்தம்பத்தில் ராஜ்குமார் 43, அரிசி கடை நடத்தி வந்தார். இவர்கள் இருவரது கடையில் இருந்து ரூ.80 ஆயிரம் மற்றும் 4 சட்டைகள், 1 மூட்டை அரிசி ஏப்., 29 ல் திருடு போனது. காளையார்கோவில் போலீஸ் விசாரணையில் அறந்தாங்கி அருகே சித்திரை வடங்கத்தை சேர்ந்த லட்சுமணன் 49, என்பவரை கைது செய்தனர். இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது குறித்தும் விசாரிக்கின்றனர்.

டூவீலர் மோதி முதியவர் பலி

திருப்புவனம்: திருப்புவனம் அருகே பிரமனூரைச் சேர்ந்தவர் செயதுமுகமது 61, தனியார் கம்பெனியில் காவலாளியாக பணிபுரியும் இவர் மதுரை -- பரமக்குடி நான்கு வழிச்சாலையில் கழுகேர்கடை அருகே வரும் போது டூவீலர் மோதியதில் உயிரிழந்தார். திருப்புவனம் போலீசார் டூ வீலர் ஓட்டிய ராமநாதபுரம் விஜய் 24,யிடம் விசாரிக்கின்றனர்.

பெண்ணிடம் நகை வழிப்பறி

காரைக்குடி: காரைக்குடி அருகே கோட்டையூர் வள்ளுவர் தெரு முத்துராமன் மனைவி உமாதேவி 37. இவர் கோட்டையூர் குப்பை கிடங்கு அருகே டூவீலரை நிறுத்தி, அலைபேசியில் பேசினார். அந்த வழியாக முகமூடி அணிந்து வந்த 30 வயதுள்ள இருவர், பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 7.5 பவுன் செயினை வழிப்பறி செய்து தப்பினர். பள்ளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்