மேலும் செய்திகள்
சிங்கம்புணரியில் 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
12-Nov-2024
சிங்கம்புணரி:சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தொடர் கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடக்கும் நிலையில் சில மாதங்களுக்கு முன் திருடு போய் ஆலமரத்தில் தொங்கவிடப்பட்ட பணத்தை மீட்டதாக போலீசார் தெரிவித்தனர்.சிங்கம்புணரியைச் சேர்ந்த சரவணன் திண்டுக்கல் ரோட்டில் உள்ள வங்கிக்கு சென்று திரும்பும் போது டூவீலரில் வைத்திருந்த ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை சிலர் திருடினர். இதுகுறித்து போலீசார் 4 மாதங்களாக விசாரித்தனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் நடந்த திருட்டு தொடர்பாக கைதான ஆந்திராவைச் சேர்ந்த நாகராஜ் 52, வெங்கடேசன் 30, ஆகியோர் சிங்கம்புணரியில் பணத்தை திருடியதையும் ஒப்புக்கொண்டனர்.இருவரையும் சிங்கம்புணரி போலீசார் விசாரித்த போது திருடிய பணத்தை மணல்மேட்டுப்பட்டி ரோட்டில் உள்ள ஆலமரத்தில் கட்டி தொங்க விட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் அளித்த தகவலின்படி குறிப்பிட்ட அந்த மரத்திலிருந்து ரூ.ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை மீட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
12-Nov-2024