உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தபால் விற்பனை நிலையம் விண்ணப்பம் வரவேற்பு 

தபால் விற்பனை நிலையம் விண்ணப்பம் வரவேற்பு 

சிவகங்கை : சிவகங்கை கோட்டத்தில் அஞ்சல் சேவைகளை மேற்கொள்ள விற்பனை நிலையங்களை திறந்து கொள்ள விண்ணப்பம் வரவேற்பதாக கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.மாரியப்பன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: தபால் சேவை இல்லாத கிராமங்களில் தபால் விற்பனை நிலையங்கள் திறந்து அங்கு ஸ்டாம்ப் விற்பனை, விரைவு தபால், பதிவு தபால், பண ஆணைகள் மற்றும் பல்வேறு சில்லரை சேவைகளை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விற்பனை நிலையம் துவக்குவோர் இந்திய குடியுரிமை பெற்றிருக்க வேண்டும். தபால் துறை செயல்பாடு பற்றிய அடிப்படை அறிவு அவசியம், தேவையான உட்கட்டமைப்புகளில் முதலீடு செய்ய வேண்டும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், இதற்குரிய விண்ணப்பத்தை தபால் கோட்ட அலுவலகத்தில் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஜூலை 28 க்குள் சிவகங்கை முத்துசாமி நகரில் உள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ