உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்

ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்

சிவகங்கை : சிவகங்கையில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் ஆரோக்கியராஜ், செயற்குழு புரட்சிதம்பி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை வாசித்தார். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு ஞானஅற்புதராஜ், குமரேசன், மாவட்ட துணை தலைவர் ரவி, துணை செயலாளர்கள் ஜீவா ஆனந்தி, அமலசேவியர், கல்வி மாவட்ட செயலாளர்கள் சிங்கராயர், சகாய தைனேஸ், ஜெயக்குமார், கல்வி மாவட்ட தலைவர்கள் பாலகிருஷ்ணன், ஜோசப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிவகங்கை நகராட்சியை தொடர்ந்து தரம் உயர்ந்ததால், மாவட்ட தலைநகராக இருந்தும், அரசு ஊழியர், ஆசிரியர்களின் வீட்டு வாடகை படியை உயர்த்தவில்லை. எனவே கலெக்டர் பழைய நிலையிலான வீட்டு வாடகை படியை சிவகங்கை ஊழியர்களுக்கு கிடைக்க செய்யவேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ