உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்

ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்

சிவகங்கை : சிவகங்கையில் தமிழ்நாடுஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் புரட்சி தம்பி தலைமை வகித்தார்.மாநில துணை தலைவர் ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சகாயதைனேஸ் விளக்கம் அளித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிங்கராயர், ரவி, குமரேசன், மாவட்ட துணை தலைவர்கள் அமலசேவியர், மரியசெல்வம், மாவட்ட துணை செயலாளர்கள் பஞ்சுராஜ், கஸ்துாரி, கல்வி மாவட்ட தலைவர் ஜோசப், கல்வி மாவட்ட செயலாளர்கள் பாலகிருஷ்ணன், ஜெயக்குமார் பங்கேற்றனர்.காலை உணவு திட்டத்தில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை நிறுத்தவேண்டும். பள்ளி துப்புரவு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டும் என தீர்மானித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை