மேலும் செய்திகள்
எடையூரில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் துவக்கம்
29-Sep-2025
சிவகங்கை: சிவகங்கை அருகே அரசனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு கிராமத்தினர் சார்பில் கல்வி சீர் வழங்கும் விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் ஜெயா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை மகிஷா வரவேற்றார். இலுப்பக்குடி இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படை பயிற்சி மைய உதவி கமாண்டன்ட் விக்னேஸ்வரன், வழக்கறிஞர்கள் அன்பரசன், ரம்யா, முன்னாள் ஊராட்சி தலைவர் செல்வராணி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிரியா, துணை தலைவர் முருகேஸ்வரி முன்னிலை வகித்தனர். பள்ளிக்கு தேவையான பொருட்களை கிராம மக்கள் ஊர்வலமாக பள்ளிக்கு எடுத்து வந்தனர். ஆசிரியர் ராமசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
29-Sep-2025