உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி கணேசபுரம் சந்தை நுழைவு வாயிலில் பள்ளம் பொதுமக்கள் அச்சம்

காரைக்குடி கணேசபுரம் சந்தை நுழைவு வாயிலில் பள்ளம் பொதுமக்கள் அச்சம்

காரைக்குடி: காரைக்குடியில், கணேசபுரம் வாரச்சந்தை நுழைவுவாயில் ரோட்டில் அபாயகரமான பள்ளம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாரத்தில் திங்கள் தோறும் கணேசபுரம் வார சந்தை நடைபெறும். இச்சந்தைக்கு வியாபாரிகள், பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இங்கு 200 க்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து காய்கறி, பலசரக்கு, பழங்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்கின்றனர். சந்தையின் நுழைவு வாயிலில் கால்வாயை ஒட்டி பெரிய பள்ளமாக காட்சி அளிக்கின்றன. இந்த பள்ளத்தை மூட மாநகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் அச்சம் நிலவுகிறது. மாநகராட்சி நிர்வாகம் சந்தை நுழைவு வாயில் பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ