உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சாக்கோட்டை சுகாதார நிலையத்தில் தரச் சான்று குழுவினர் தொடர் ஆய்வு

சாக்கோட்டை சுகாதார நிலையத்தில் தரச் சான்று குழுவினர் தொடர் ஆய்வு

காரைக்குடி: சாக்கோட்டை வட்டாரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில்தேசிய தரச் சான்று குழுவினர் தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய சுகாதார வள மையம், தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தரச் சான்று வழங்கப்படுகிறது. மருத்துவ சேவை மற்றும் மருத்துவமனையின் தரம் குறித்து மதிப்பீடு செய்து தேசிய தர நிர்ணய அங்கீகார சான்றிதழ் வழங்கப்படுகிறது. சாக்கோட்டை வட் டாரத்தில் உள்ள செஞ்சை, முத்துப்பட்டினம் மற்றும் கோட்டையூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய தரச் சான்று குழு வினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். நேற்று தொடங்கிய ஆய்வு செப்.11 வரை நடைபெறுகிறது. நேற்று செஞ்சை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரச் சான்று குழுவினர் சுரேஷ் பட்ஜு, ரமேஷ் ஷிவானா ஆய்வு செய்தனர். இதில் மாநகர நல அலுவலர் வினோத் ராஜா, வட்டார மருத்துவ அலு வலர் ஆனந்தராஜ், மருத்துவர்கள் லட்சுமி, காயத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை