உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருச்சி--காரைக்குடி பாசஞ்சர் ரயிலைமதுரை வரை நீட்டிக்க வாய்ப்பில்லை ரயில்வே நிர்வாகம் கைவிரிப்பு 

திருச்சி--காரைக்குடி பாசஞ்சர் ரயிலைமதுரை வரை நீட்டிக்க வாய்ப்பில்லை ரயில்வே நிர்வாகம் கைவிரிப்பு 

சிவகங்கை:திருச்சி - காரைக்குடி பாசஞ்சர் ரயிலை மானாமதுரை வழியாக மதுரைக்கு நீட்டிக்க வாய்ப்பே இல்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.திருச்சியில் இருந்து தினமும் (வண்டி எண்: 56815) காலை 10:20 மணிக்கு புறப்படும் பாசஞ்சர் ரயில் 9 ஸ்டேஷன்களில் நின்று மதியம் 12:10 மணிக்கு காரைக்குடிக்கு வருகிறது. அதே போன்று தினமும் மதியம் 3:15 மணிக்கு காரைக்குடியில் (வண்டி எண்:56816) புறப்படும் இந்த ரயில் மாலை 5:20 மணிக்கு திருச்சி சென்று சேரும். 90 கி.மீ., துாரத்திற்கு இயக்கப்படும் இந்த பாசஞ்சர் ரயிலை பயணிகளின் வசதிக்காக சிவகங்கை, மானாமதுரை வழியாக மதுரை வரை இயக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள், தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.திருச்சி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக மதுரைக்கு பாசஞ்சர் ரயில் தினமும் சென்று வந்தால், இப்பகுதி வர்த்தகர்கள் மதுரைக்கு சென்று தங்கள் வர்த்தக நிறுவனங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வர ஏதுவாக அமையும். அதே போன்று அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தடையின்றி மதுரை, காரைக்குடி, திருச்சி போன்ற கல்லுாரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் சென்றுவர வசதி ஏற்படும். எனவே திருச்சி - காரைக்குடி பாசஞ்சர் ரயிலை சிவகங்கை, மானாமதுரை வழியாக மதுரை வரை நீட்டிக்க வேண்டும் என தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

நிர்வாகம் கைவிரிப்பு

திருச்சி, சிவகங்கை மாவட்ட பயணிகளின் கோரிக்கைகளை நிராகரிக்கும் விதமாக, திருச்சி -- காரைக்குடி பாசஞ்சர் ரயிலை மதுரை வரை நீட்டிக்க முடியாது. ஏனென்றால் காரைக்குடி - மானாமதுரை இடையே ரயில் பராமரிப்பு கூடம் இல்லை என பதில் அளித்துவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி