மேலும் செய்திகள்
ரயில்வே கேட் மூடலா: மக்கள் முற்றுகை
04-Oct-2025
மானாமதுரை: மானாமதுரையில் பைபாஸ் ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடுவதை கண்டித்து வரும் அக்.14 ல் சர்வ கட்சியினர் பல்வேறு சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிலிருந்து சிவகங்கை செல்லும் சர்வீஸ் ரோட்டில் உள்ள பைபாஸ் ரயில்வே கேட்டில் சில நாட்களாக மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இக்கேட்டை நிரந்தரமாக மூடுவதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி சர்வ கட்சியினர் மற்றும் அப்பகுதி மக்கள், பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் நடைபெற்ற சர்வ கட்சியினர் மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டத்தில் அக்.14ம் தேதி மறியல் போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
04-Oct-2025