உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பயிர்களை காப்பாற்றிய மழை

பயிர்களை காப்பாற்றிய மழை

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் பெய்து வரும் கோடை மழையால் குறுவைப் பயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.இவ்வொன்றியத்தில் சிங்கம்புணரி, எஸ்.புதூர், பிரான்மலை, ஒடுவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பலர் குறுவை நெல் சாகுபடி செய்துள்ளனர். பலர் கடலையும் விதைத்துள்ளனர். கடும் வெப்பம் வாட்டி நிலத்தடி நீர் குறைந்து வந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் அழிந்து விடுமோ என்று விவசாயிகள் கவலையில் இருந்தனர்.இந்நிலையில் இப்பகுதியில் கோடை மழை பெய்யத் தொடங்கியுள்ளது.நேற்று இச்சுற்றுவட்டாரத்தில் காற்றுடன் பெய்த மழையால் குறுவை, கடலை சாகுபடி செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை