| ADDED : ஜன 02, 2024 05:30 AM
தேவகோட்டை; அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ந்தேதி நடைபெற உள்ளது.விழாவிற்கான அழைப்பிதழ் வீடு வீடாக விநியோகிக்கும் பணி துவங்கியது. பா.ஜ., இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் விநியோகிக்கும் பணியை சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலில் துவங்கினர்.ரங்கநாத பெருமாள் கோயில், கோதண்டராமர் கோயில் ஆகியவற்றிலும் வழங்கினர். பா.ஜ. சிவகங்கை எம்.பி. தொகுதி பொறுப்பாளர் அர்ஜுனமூர்த்தி தலைமையில் மாவட்ட தலைவர் சத்தியநாதன் முன்னிலையில் அமராவதிபுதுார் சாரதா கோயில் மடத்தை சேர்ந்த சாராதேஸ்வரி ப்ரியம்பா, ராமகிருஷ்ண ப்ரியம்பா, பா.ஜ. நிர்வாகிகள் கோமதி நாச்சியார், பத்மா அழைப்பிதழ், ராமர் கோயில் படம், கோயில் அட்சதை, கற்கண்டு, விபூதி, உள்ளிட்ட பொருட்களை வீடுவீடாக வழங்கினர்.* சிங்கம்புணரியில் அனைத்து வீடுகளுக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் கொடுக்கும் பணி துவங்கியது.கும்பாபிஷேகத்திற்காக கிராம கோயில்களில் இருந்து ஏற்கனவே தீர்த்தம் அனுப்பப்பட்ட நிலையில் தற்போது அனைத்து வீடுகளுக்கும் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்திரா டிரஸ்ட் சார்பில் இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் அழைப்பிதழ்களை வழங்கி வருகின்றனர்.