| ADDED : பிப் 10, 2024 05:07 AM
மானாமதுரை: மானாமதுரை வைகை கரையோரம் அமைந்துள்ள ஆனந்தவல்லி சோமநாதர் கோவில், வீர அழகர் கோவில்களில் வருடம்தோறும் 10 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கு சுற்று வட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் வருவது வழக்கம்.நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி கூறுகையில், இந்த வருடம் சித்திரைத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக வைகை ஆற்றில் தண்ணீர் சென்றதால் வைகை ஆற்றுக்குள் மேடு, பள்ளமாக செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. அவற்றை சீரமைக்க மானாமதுரை நகராட்சி சார்பில் ரூ. 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.வைகை ஆற்றுக்குள் செல்லும் பகுதிகளில் மின்விளக்கு, குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பறை என பல்வேறு வசதி செய்து கொடுக்கப்பட உள்ளது என்றார்.