உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு பஸ்களில் மாற்று டயர் மாயம்: நடு ரோட்டில் பழுதாகும் பஸ்களால் பயணிகள் அவதி l

அரசு பஸ்களில் மாற்று டயர் மாயம்: நடு ரோட்டில் பழுதாகும் பஸ்களால் பயணிகள் அவதி l

மதுரை- ராமேஸ்வரம் வழித்தடத்தில் காரைக்குடி, மதுரை, சேலம், கோவை, ஈரோடு ஆகிய மண்டலங்களைச் சேர்ந்த பஸ்கள் இயக்கப்படுகின்றன. சுற்றுலா தலமான ராமேஸ்வரத்திற்கு தினசரி ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.பாம்பன் பாலப்பணிகள் நடந்து வருவதால் வெளி மாநிலங்களில் இருந்து ரயில்களில் வருபவர்கள் மதுரையில் இறங்கி பஸ்களை நம்பியே பயணம் செய்கின்றனர். மதுரையில் இருந்து திருப்புவனம் வழியாக காரைக்குடி கோட்டத்தைச் சேர்ந்த 93 பஸ்களும், மதுரை கோட்டத்தைச் சேர்ந்த 50 பஸ்களும், கோவை, ஈரோடு, சேலம் மண்டலங்களைச் சேர்ந்த தலா ஒரு பஸ்களும் இயக்கப்படுகின்றன.புதிய பஸ்களில் ஸ்டெப்னி டயர்கள், ஜாக்கி, லீவர் உள்ளிட்டவை வழங்கப்படும், டயர்கள் பழுதானால் டிரைவர்கள் ஸ்டெப்னி டயர்களை மாற்றி இயக்குவது வழக்கம், ஆனால் போக்குவரத்து கழக அதிகாரிகள் புதிய ஸ்டெப்னி டயர்களை வேறு வண்டிகளில் பொருத்தி இயக்க சொல்வதால் பல பஸ்கள் ஸ்டெப்னி டயர்கள் இன்றியே இயக்கப்படுகின்றன.கடும் கோடை வெயில் காரணமாக டயர்கள் அடிக்கடி பழுதாவது வழக்கம். நடுவழியில் பஸ்கள் ஸ்டெப்னி டயர்கள் இன்றி நிற்கும் அபாயம் உள்ளது. எனவே தொலை துார பஸ்களில் ஸ்டெப்னி டயர்களை பொருத்தி இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். டிரைவர்கள் கூறுகையில்: புதிய பஸ் ஸ்டெப்னி டயர்களை வேறு வண்டிகளில் பொருத்தி இயக்குகின்றனர். மதுரை-ராமேஸ்வரம் வழித்தடத்தில் அனைத்து பஸ்களிலும் ஸ்டெப்னி டயர் இல்லை. இந்த வழித்தடத்தில் காரைக்குடி மண்டலத்தைச் சேர்ந்த ஐந்து பஸ்களில் ஒன்றில் மட்டும் இருக்கும், டயர்கள் பழுதாகி நின்றால் ஸ்டெப்னியுடன் வரும் பஸ்சை நிறுத்தி அதில் இருந்து வாங்கி பொருத்த வேண்டும், கோவை, சேலம், ஈரோடு செல்லும் பஸ்களில் மட்டும் ஸ்டெப்னி டயர்கள் உண்டு, மற்ற வண்டிகளில் டயர்களே இல்லை, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி