குடியரசு தின அணிவகுப்பு சிவகங்கை மாணவர் தேர்வு
சிவகங்கை: டில்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கு பெற சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரி தேசிய மாணவர் படையைச் சேர்ந்த சிரஞ்சித் என்ற மாணவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.ஜன. 26ம் தேதி நடக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொள்வதற்காக 2 ஆயிரத்து 361 தேசிய மாணவர் படை மாணவர்கள் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.காரைக்குடி 9வது பட்டாலியனில் இந்த ஆண்டு 2 ஆயிரத்து 881 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களில் இரண்டு மாணவர்கள் டில்லியில் நடைபெற விருக்கின்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இதில் ஒருவர் தான் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லுாரியைச் சேர்ந்த மாணவர் சிரஞ்சித். இவர் இளங்கலை கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.மாணவர் சிரஞ்சித்தை கல்லுாரி முதல்வர் துரையரசன், பேராசிரியர்கள் அழகுச்சாமி, கலைச்செல்வி, தேசிய மாணவர் படை அதிகாரி சதீஸ் கண்ணா உள்ளிட்டோர் பாராட்டி அணிவகுப்பில் பங்கேற்க வழி அனுப்பி வைத்தனர்.