சிறுமி பலாத்காரம்; ஓய்வு அதிகாரிக்கு10 ஆண்டு சிறை
சிவகங்கை : சிவகங்கையில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஓய்வு பெற்ற கருவூல அதிகாரிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.சிவகங்கை அரசு அலுவலர்கள் குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜ்குமார் 62. இவர் 2018ஆம் ஆண்டு சிவகங்கையில் உள்ள கிளை கருவூலக அதிகாரியாக பணிபுரிந்தார்.தாயாரின் பராமரிப்பில் இருந்த 13 வயது சிறுமிக்கு தேவையான உதவிகளை இவர் செய்தார். அதனை பயன்படுத்தி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ராஜ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை நீதிபதி கோகுல் முருகன் விசாரித்தார். ராஜ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்த நீதிபதி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.