ஓய்வு பெற்றோர் நலச்சங்க கூட்டம்
காரைக்குடி: காரைக்குடியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல சங்க வழக்கு நிதி வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சியில், ராமநாதபுரம் சங்க தலைவர் ராஜாராம் பாண்டியன் தலைமை வகித்தார். பொருளாளர் சுந்தரம் வரவேற்றார். திருப்புத்துார் சங்க செயலாளர் தியாகராஜன் நன்றி கூறினார். கூட்டத்தில் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை, நீதிமன்ற உத்தரவின்படி பணியாளர்களுக்கு இணையாக, மீதமுள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். அரசு ஊழியர்களைப் போல் ஓய்வு பெற்றவர்களுக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டம் வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.