ஆக்கிரமிப்புகளால் சுருங்கும் ரோடுகள்
சிங்கம்புணரி: சிங்கம்புணரி பேரூராட்சியில் ஆக்கிரமிப்புகளால் ரோடுகள் சுருங்கி வருவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.இப்பேரூராட்சியில் 18 வார்டுகளில் 100க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. அனைத்து தெருக்களுக்கும் வாகனங்கள் சென்று வர ரோடுகள் உள்ளன. சில ஆண்டுகளாக பல்வேறு தெருக்களில் ரோடுகள் குடியிருப்பு வாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் சாலைகள் சுருங்கி சிறிய வாகனம் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் கண்டு கொள்வதில்லை.இதே நிலை தொடர்ந்தால் வரும் காலங்களில் டூவீலர் கூட சென்று திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டு விடும். தெருக்கள் இடையே உள்ள ரோடுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.