ரோல்பால் போட்டி
காரைக்குடி; அமராவதிபுதுார் ராஜராஜன் பள்ளியில் தமிழ்நாடு ரோல் பால் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான ரோல்பால் போட்டி நடந்தது. 14 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் கயல் மற்றும் ஹயாத்தி தங்கப்பதக்கம் பெற்றனர்.11 வயதுக்குட்பட்ட பிரிவில் சாய் விசாகன், ஆர்யா, கார்த்திகேயன் வெள்ளி பதக்கம் பெற்றனர். 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தனுஷ் ஆதித்யா, 11 வயது பிரிவில் சஜன் முத்தரச பாண்டியன், துவாரகேஷ் ஜெகத்பதி ஆகியோர் வெண்கல பதக்கம் பெற்றனர். மாணவர்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன், பள்ளி தாளாளர் சுப்பையா, பள்ளி முதல்வர் வடிவாம்பாள் வாழ்த்தினர்.