சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் கூரை பணி: எம்.பி., ஆய்வு
சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் ரூ.2 கோடிக்கான கூரைகள் கட்டும் பணியினை முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பார்வையிட்டார்.சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் மதுரை, திருப்புத்துார் பஸ்கள் நிறுத்தப்படும் இடத்தில் கூரை அமைப்பதற்காக எம்.பி.,க்கள் சிதம்பரம், கார்த்தி ஆகியோர் தலா ரூ.1 கோடி வீதம் ரூ.2 கோடி ஒதுக்கினர். இந்த நிதியின் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்துமாறு கூறினார். மாங்குடி எம்.எல்.ஏ., காங்., மாவட்ட தலைவர் சஞ்சய், நகர் தலைவர் விஜயகுமார், கவுன்சிலர் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.