| ADDED : டிச 30, 2025 05:37 AM
சிவகங்கை: இல்லம் தேடி மருத்துவ திட்டத்திற்காக ரூ.1 கோடி மதிப்பிலான ஆம்புலன்ஸ் வாகனத்தை கலெக்டர் பொற்கொடி துவக்கி வைத்தார். மத்திய அரசின் கிராம மின்மயமாக்கல் திட்டத்தின் கீழ், கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு இல்லம் தேடி மருத்துவம் வழங்கும் நோக்கில், ரூ.1 கோடி மதிப்பிலான ஆம்புலன்ஸ் வாகனத்தை மத்திய அரசு, சிவகங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு வழங்கியுள்ளது. இதில், ஒரு டாக்டர், நர்சு, மருந்தாளுநர் பணியில் இருப்பர். கிராமங்கள் தோறும் சென்று இலவசமாக மருத்துவம் அளித்து, மாத்திரை வழங்கப் படும். மாநில அளவில் இது போன்று 10 ஆம்புலன்ஸ்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. சிவ கங்கைக்கு வழங்கிய ஆம்புலன்ஸ் வாகனத்தை கலெக்டர் பொற்கொடி துவக்கிவைத்து, வாகன சாவியை இளம் செஞ்சிலுவை சங்க மாவட்ட தலைவர் சுந்தரராமனிடம் ஒப்படைத்தார். கலெக்டர் பி.ஏ., (பொது) விஜயகுமார், மாவட்ட சுகாதார அலுவலர் மீனாட்சி, தாசில்தார் விஜயகுமார், டாக்டர் பானுப்பிரியா, கண்காணிப்பு அலுவலர் அருண்கிருஷ்ணன், நிர்வாக அலுவலர் விக்னேஸ்வரி, மாவட்ட செயலாளர் அனந்தகிருஷ்ணன், துணை தலைவர் முத்துப்பாண்டியன், உறுப்பினர் சரவணன் பங்கேற்றனர்.